VIJAY: விக்கிரவாண்டி தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு.?விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Jun 18, 2024, 11:07 AM IST

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி தொகுதியில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லையென கூறியுள்ளது. 
 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமான நிலையில் அந்த தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், திமுக- பாமக- நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடவுள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆதரிக்கும் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

தமிழக வெற்றிக்கழகம் நிலைப்பாடு என்ன.?

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர். தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி.!

Tap to resize

TVK

தவெக- முதல் மாநில மாநாடு

கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று,

வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று. மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

vikravandi

போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்,

தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன் என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

DMK : அமைச்சர் மஸ்தானின் கட்சி பதவி பறிப்பால் உருவான சிக்கல்.! அதிரடியாக புதிய அறிவிப்பு வெளியிட்ட திமுக தலைமை

Latest Videos

click me!