பொதுமக்களுக்கு அடித்தது ஜாக்பாட்- பொங்கல் பரிசு போட்டி அறிவிப்பு.! தமிழக அரசின் சூப்பர் பிளான்

Published : Jan 07, 2025, 07:37 AM IST

 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  பொதுமக்களுக்காக 8 பிரிவுகளில் கலைப் போட்டிகளை அறிவித்துள்ளது. 

PREV
17
பொதுமக்களுக்கு அடித்தது ஜாக்பாட்- பொங்கல் பரிசு போட்டி அறிவிப்பு.! தமிழக அரசின் சூப்பர் பிளான்
Pongal-2025

பொங்கல் கொண்டாட்டம்

நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் திருவிழா, உற்சாகமாக ஆண்டுத்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நமது வாழ்வியலோடு. குறிப்பாக நிலத்தையும் அதன் உயிர்நாடியான உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தையும் இணைத்து நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும், தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்குபெறும் வகையில் 8 பிரிவுகளில் கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

27
pongal

தமிழக அரசின் பொங்கல் கொண்டாட்டம்

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி சிறந்த படைப்பைப் படைத்த படைப்பாளிகளை மாண்புமிகு  சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவுள்ளது.  
இயற்கையை அன்னையாகப் போற்றி வணங்கி, இந்த உன்னதப் பயிர்த்தொழில் செய்பவர்களின் இந்த விழா, மத உணர்வுக்கு அப்பாற்பட்டு கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. நமது பண்பாட்டு விழுமியங்களான, வீரம், கொடை, உழைப்பு ஆகியவற்றை உணர்த்தும் இந்த பொங்கல் திருநாளுக்கு, பெருமை சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை,

37
Pongal competition

கலைப்போட்டிகள் என்ன.?

1.கோலப்போட்டி, 2. ஓவியப்போட்டி, 3. புகைப்படப் போட்டி, 4. ரீல்ஸ் போட்டி, 5. பாரம்பரிய உடைப் போட்டி, 6. மண்பானை அலங்கரித்தல் போட்டி. 7. சுயமிப் போட்டி, 8.ஆவணப்படங்கள் முதலிய கலைப்போட்டிகளை நடத்துகிறது. மாணவ- மாணவியர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் போட்டியில் கலந்து கொண்டு பொங்கல் விழாவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

47
Pongal festival

போட்டிகளும்-  விதிமுறைகளும் 

1. கோலப் போட்டிகள்:

கருப்பொருள்: பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர் மரபுகளைக் காட்சிப்படுத்தும் கோலங்கள். அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

2. ஓவியப் போட்டிகள்(Drawing):

கருப்பொருள்: உழவர் பொங்கல் திருநாள் பற்றிய ஓவியங்கள் வகைகள் (பெயிண்டிங், பென்சில், ஸ்கெட்ச், க்ரேயன்ஸ்). அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

3. புகைப்படப் போட்டி (Photography):

கருப்பொருள்: ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய காட்சிகள், பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரம் போன்றவற்றைப் புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும். அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
 

57
Pongal competition

தகுதி என்ன.?

4. Reels போட்டிகள்: ஒரு நிமிடத்திற்குள் ( within 1 min)

கருப்பொருள்: நாட்டுப்புறக் கதைகள் / நாட்டுப்புறப் பாடல்கள் / சிலம்பாட்டம் / கரகாட்டம் / ஏறுதழுவுதல் / ஜல்லிக்கட்டு காளை மாடுகளைத் தயார்படுத்துதல்.
அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

5. பாரம்பரிய உடைப் போட்டிகள்:

1 வயது முதல் 13 வயது வரை மட்டுமே.

6. மண்பானை அலங்கரித்தல் போட்டி:

அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

67
pongal

பங்கேற்க அழைப்பு

7. சுயமிப் போட்டிகள்(Selfie):

கருப்பொருள்: பொங்கல் பானையுடன் ஒரு செஃல்பி / ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு செஃல்பி / பொங்கல் நிகழ்ச்சிகள் உடன் செஃல்பி எடுத்து அனுப்பவும். அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.

 

77
Pongal Celebration

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

8. ஆவணப்படம்(Documentary):

கருப்பொருள்: தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுகிறது / ஜல்லிக்கட்டு விளையாட்டு / ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள்.
அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.போட்டிகளில் அனைவரும் பங்கேற்று பொங்கலை கொண்டாடி மகிழலாம்.

படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்டதாக இருத்தல் கூடாது. உங்கள் சுயமான படைப்பாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை 20-01-2025க்குள் கீழ்கண்ட க்யூ-ஆர் கோட்டினை ஸ்கேன் செய்து விண்ணப்பித்தினைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும். (tndiprmhpongal2025@gmail.com) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்

Read more Photos on
click me!

Recommended Stories