tour
இயற்கையை தேடி செல்லும் மக்கள்
இயந்திர வேகத்திற்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு சில நாட்கள் ஓய்வு கிடைத்தால் போதும் குடும்பத்தோடோ அல்லது நண்பர்களோடு வெளியூருக்கு பறந்து விடுவார்கள். அந்த வகையில் கடவுளின் தேசமாக கருதப்படும் கேரளாவில் இயற்கை அள்ளிக்கொடுத்த பல அழகான இடங்கள் உள்ளது. அதிலும் முக்கியமானது படகு இல்லம். இந்த படகில் தங்கவே தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்று வருகிறார்கள்.
floating restaurant
கேரளா படகு இல்லம்
ஒரு நாளைக்கு ஒரு அறைக்கு 5 முதல் 10ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் இயற்கையை ரசிக்க மக்கள் படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இதே போன்று படகு சென்னையிலேயே அமைக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா.? ஆமாம், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது.
Muttukadu boat house
சென்னையில் மிதவை படகு
இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரம்மாண்டமாக படகு இல்லம் கடந்த சில மாதங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொதுபங்களிப்பு திட்டத்தின் மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
floating restaurant
மிதக்கும் உணவக கப்பல்
ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூபாய் 5.00 கோடியாகும். தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) அமைக்கப்படுகிறது.
இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Muttukadu boat house
இன்று முதல் மிதவை உணவக கப்பல்
மேலும் இக்கப்பலில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த மிதவை கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பலின் நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகு கட்டுமானம் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்காக இன்று முதல் துவக்கப்படவுள்ளது.