கை நிறைய கொட்டும் பணம்.! அழகு கலைப் பயிற்சியில் சேர விருப்பமா.? உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

First Published | Dec 23, 2024, 3:11 PM IST

தமிழக அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறன் மேம்பாட்டிற்காக அழகுக்கலை பயிற்சி அளிக்கப்பட்டு, அரசு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

job alert

தமிழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலை இல்லாத நிலை இருக்க கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பணியில் இணைபவர்களுக்காக பயிற்சி வழங்கி தேர்வு நடத்தப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குகிறது. மேலும் தனியார் துறை வேலை வாய்ப்பை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பல லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

beauty parlour training tamilnadu

அழகுக்கலைப்பயிற்சி

இது மட்டுமில்லாமல் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி கடனுதவிக்கான வழிகாட்டியும் வருகிறது. அந்த வகையில் அழகுக்கழை பயிற்சி தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில்  Maha International Academy for Hair & Beauty (Vaari Educational Trust) சார்பில் அழகுக்கழை பயிற்சி வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Beauty Parlour

 அழகு கலைப் பயிற்சிகள்

1. Makeup Artist

2. Hair Stylist

3. Assistant Beauty Therapist

4. Nail Technician

5. Assistant Nail Therapist

beauty parlour training

கல்வி தகுதி

10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் 

பயிற்சி வழங்கப்படும் இடம்

சென்னை (மைலாப்பூர்) மற்றும் திண்டிவனம் (வி.கே.எம் பள்ளி)


சிறப்பு வசதிகள்

* அரசு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி

* தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் 

* தகுதிக்கு ஏற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்

கூடுதல் தகவல்களுக்கு: https://acesse.one/naanmudhalvanbeautyfreecourse
 

Latest Videos

click me!