மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம்- வெளியான அறிவிப்பு

First Published | Dec 23, 2024, 12:00 PM IST

தமிழக அரசு, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 2023-24 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

School student

கல்விக்கு முக்கியத்துவம்

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மேல் நாட்டில் உள்ள கல்விக்கு இணையான பாடங்களையும் நடத்தி வருகிறது. மேலும் மாணவர்களு ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலாவிற்கும் அழைத்து செல்லப்படுகிறது. அதன் படி பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,  பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள் விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள்
 

Education tour

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா

உலக அளவிலும் தேசிய அல்லது மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என அறிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த  2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 4 மன்ற போட்டிகளில், ஒவ்வொரு மன்றத்திற்கும் 25 மாணவர்கள் வீதம் வெற்றியாளர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டனர். இம்மாணவர்களை பாராட்டும் வகையிலும் மற்றும் அவர்கள் அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்திலும், தமிழக அரசால் 3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 

Tap to resize

school student

மாணவர்களுக்கான போட்டி

ஒவ்வொரு மன்ற வெற்றியாளர்களும் மலோசியா, சிங்கப்பூர் ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்குச் சென்று தங்கள் பயணங்களிலிருந்து விரிவான அனுபவத்தையும் அறிவையும் பெற்றனர். நுண்கலை மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களும் அவ்வாறே அழைத்து செல்லப்பட்டனர். மன்ற வாரியாக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த வகையில் இலக்கிய மன்றம் சார்பாக 25 மாணவர்கள் சிங்கப்பூருக்கும், வினாடி வினா மன்றம்,வானவில் மன்றம்,சிறார் திரைப்பட மன்றம் ஆகியவற்றின் மூலம் 75 மாணவர்கள் தென் கொரியா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

School Student Teacher

மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா

அடுத்ததாக பள்ளிகளில் நடைபெற்ற  கலைத்திருவிழா போட்டியில் வெற்றிப்பெற்ற 21 மாணவர்கள் மலேசியா நாட்டிற்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 22 மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கும் கல்வி சுற்றுலா சென்றனர். இதனையடுத்து இந்த 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கான அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள் 14.02.2024 முதல் 16.02.2024 வரை நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான மன்றப் போட்டிகள் 27.02.2024 முதல் 14.03.2024 வரை நடத்தப்பட்டன. 
 

school student

சிங்கப்பூருக்கு கல்வி சுற்றுலா

முதற்கட்டமாக மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில் 20 மாணவ மற்றும் மாணவியர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரும் மற்றும் அலுவலர் ஒருவரும் 22.08.2024 முதல் 27.08.2024 வரை ஹாங்காங் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.தற்போது 23.12.2024 அன்று முதல் 27.12.2024 வரை 42 மாணவர்கள், 3 அலுவலர்கள் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரும் சிங்கப்பூர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. .

Latest Videos

click me!