school teacher
மாணவர்களின் முன்னேற்றம்
கல்வி மட்டுமே எதிர்கால தலைமுறையினரை சிறப்பாகவும், வளர்ச்சியை நோக்கி செலுத்த முடியும். இதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் மாதா, பிதா குரு தெய்வம் என வரிசைப்படுத்துகிறார்கள். மாணவர்கள் சிறந்த முறையில் முன்னேறுவதற்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம். அதன் படி சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பாக பரிசுகளும், நல்லாசிரியர்கள் விருதும் வழங்கி வருகிறது.
school teacher
நல்லாசிரியர் விருது
மேலும் ஆசிரியர்களுக்கிடையே போட்டி நடத்தி சிறந்த முறையில் வெற்றி பெறும் ஆசிரியர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலாவும் அழைத்து செல்லப்படுகிறது. கடந்த முறை 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்தநிலையில் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறமையை அதிகரிக்கும் வகையில் பயிற்சிகள் அவ்வப்போது நடத்தி வருகிறது. அதன் படி எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு ஒன்றியளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் பருவத் தேர்வு ஜனவரி 6 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
teacher
எண்ணும் எழுத்தும் பயிற்சி
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
1ஆம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜனவரி 21, 22-ம் தேதிகளிலும், 4, 5-ம் வகுப்புக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளிலும் பயிற்சிகள் நடைபெறுகிறது. எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.