tomato onion
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?
காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கியமானது அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை அதிகமானது. எந்த வித சமையலாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் உணவு சமைக்க முடியாது. அந்த வகையில் தக்காளி வெங்காயத்தின் விலையானது கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் மாத பட்ஜெட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு என தனியாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சமையலிலும் குறைவான அளவே தக்காளி வெங்காயம் பயன்படுத்தப்பட்டது.
tomato onion price
அதிகரித்த தக்காளி விலை
விலை உயர்வால் இல்லத்தரசிகள் குறைவான அளவே தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி சென்றனர். எனவே விலையை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த ரயில்களில் டன் கணக்கில் தமிழ்நாடு, டெல்லி, மஹாராஷ்டிரா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பியது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசும் தக்காளி விலையை குறைக்கும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய்க்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை விற்பனை செய்தது.
tomato price
அதிகரித்த விளைச்சல்
இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய வகையில் சென்று சேராத நிலை நீடித்தது. இந்தநிலையில் மழை பாதிப்பு குறைந்ததன் காரணமாகவும், காரிப் பருவ பயிர்கள் வரத்தின் காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ளது. டன் கணக்கில் காய்கறி சந்தைக்கு தக்காளி மற்றும் வெங்காயம் வருகிறது. இதனால் விற்பனை விலையானது சரசரவென சரிந்தது.
Onion Price Today
காய்கறி விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு 25 ரூபாய்க்கும், பீட்ரூட் 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price
முருங்கைக்காய் விலை என்ன.?
அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 15 முதல் 20 ரூபாய்க்கும், கொத்தவரை 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price
குறைந்தது இஞ்சி விலை
பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது