ரேஷன் கடையில் மிஸ் பண்ணாதீங்க.! இது தான் கடைசி தேதி- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தமிழக ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும். விடுமுறை காரணமாக 29.03.2025 அன்று கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும். விடுமுறை காரணமாக 29.03.2025 அன்று கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
Ration shops will open on March 29th : ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் 37 ஆயிரம் முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டையின் தன்மையை பொறுத்து உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதன் படி அரசி, சக்கரை, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகையின் போது பரிசு பொருட்களும், இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. எனவே ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் மாத கடைசியில் ரேஷன் கடைகளில் உணவுப்பொருள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதால்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது.
மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அதாவது சனிக்கிழமை அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.