தொடர்ந்து வரும் 4 நாள் விடுமுறை.! குஷியான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

Special bus service announced for 4 day holiday on the occasion of Ramzan KAK

4 consecutive days of holiday in Tamil Nadu : விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம் தான், அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையானது வரவுள்ளது. இந்த நிலையில் இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊருக்கு செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் பொதுமக்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதனையடுத்து அவர்களுக்கு வசதியாக  சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Special bus service announced for 4 day holiday on the occasion of Ramzan KAK
தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்து அறிவிப்பு

28/03/2025 (வெள்ளிக் கிழமை) 29/03/2025 (சனிக்கிழமை), 30/03/2025 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 31/03/2025 அன்று ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 28/03/2025 மற்றும் 29/03/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


3 நாள் சிறப்பு பேருந்து இயக்கம்

இதன் படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வருகிற (28/03/2025) வெள்ளிக் கிழமை அன்று 460 பேருந்துகளும், சனிக் கிழமை (29/03/2025 )அன்று 530 பேருந்துகளும் ஆக மொத்தம் 990 பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.  

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28/03/2025 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 29/03/2025 சனிக்கிழமை அன்று 95 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

தொடங்கியது முன்பதிவு

மாதாவரத்திலிருந்து 28/03/2025 வெள்ளிக்கிழமை மற்றும் 29/03/2025 சனிக்கிழமை அன்று தலா 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் 31/03/2025 திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட வெளியூர் திரும்பும் பயணிகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கு 890 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட முடிவாகியுள்ளது.

சென்னை திரும்பி வர சிறப்பு பேருந்து இயக்கம்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 13,841 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6,198 பயணிகளும் மற்றும் திங்கள் அன்று 8,786 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.instc.in o Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Latest Videos

vuukle one pixel image
click me!