Published : Jun 17, 2025, 01:36 PM ISTUpdated : Jun 17, 2025, 01:44 PM IST
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் கன்னட மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது உச்சநீதிமன்றம்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக இந்த திரைப்பட விளம்பர நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கருத்தை பெஙு்களூரில் தெரிவித்திருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து 'தக் லைஃப்' திரைப்பட வெளியிட தடை விதித்தனர்.
மேலும் கர்நாடகா அரசும் கமலுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததது. இதன் காரணமாக கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் தனது புதிய படமான 'தக் லைஃப்' வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
24
கமலுக்கு எதிராக சீறிய கர்நாடக நீதிமன்றம்
இந்த மனு நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது கமல்ஹாசனைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதி, கன்னட மொழி தொடர்ப்பாக கமல் கருத்து தெரிவித்துள்ளார் அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது.
கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் படத்தை ரீலிஸ் செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது எனக் கூற கமல் வரலாற்று ஆய்வாளரா? ராஜகோபாலாச்சாரி கூட மன்னிப்பு கேட்டார். இன்றைய பதற்றமான நிலைக்கு நீங்களே காரணம். ஆனால் மன்னிப்பு கேட்காமல் அலட்சியம் காட்டுகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
34
கமல் மன்னிப்பு கேட்க வற்புறுத்தல்
இதனையடுத்து கமல் விளக்கம் அளித்து கடிதம் அளித்த நிலையில அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே என நீதிபதி கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விவாதத்தின் போது கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியிடப்படாது என கமல் தரப்பு தெரிவித்திருதது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைத்திருந்தார். இதனிடையே உச்சநீதிமன்றத்தில் கமல் தரப்பில் வழக்கு தொடர்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை எந்த பிரச்னையில்லாமல் திரையிடுவதற்காக பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கர்நாடகா நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
தக் லைஃப் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நீதிபதிகள், கன்னட மொழி குறித்து கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி கூறலாம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்த படமாக இருந்தாலும் அது வெளியாவதை தடுக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின் கடமை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.