நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்ததால், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களாக கோவை, நீலகிரி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி அருகே மஞ்சனகொரை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பத்து நாட்களில் இந்த சாலையில் இரண்டாவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. 4 நாட்களுக்கு பின் மழையின் தாக்கம் இன்று சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26
சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் 7 சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதாவது தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைக் மரக்காடுகள், படப்பிடித்தலம், கேரன்ஹில், 8, 9th மைல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
36
8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.
56
கோவை, நீலகிரியில் கனமழை
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
66
இன்றைய சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.