8. பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக் கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
9. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
10. பள்ளியில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையிலும் மழை நீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
11. பள்ளியில் உள்ள வகுப்பறைகளின் சுவர், தலைமை ஆசிரியர் அறையின் சுவர், சமையலறையின் சுவர் மற்றும் பள்ளியின் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் உறுதி தன்மையை முன்கூட்டியே கண்காணித்து பழுதுகள் ஏதும் இருப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக சரி செய்திட வேண்டும்.