சென்னையில் வெளுத்துக்கட்டும் கனமழை; மதுரை, சிவகங்கையில் மீண்டும் புயல் - எச்சரிக்கும் வெதர் மேன்!

First Published | Oct 14, 2024, 11:11 PM IST

Chennai Rain : சென்னை மதுரை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Heavy Rain

இந்த ஆண்டு, பிற ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது 15 நாட்களுக்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் 18ஆம் தேதி வரை அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இன்றும் தமிழகத்தின் அநேக இடங்களிலும், சென்னையின் பல பகுதிகளிலும் மாலை முதல் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி வீடு தேடி வரும் ரேஷன் கடை உணவு பொருட்கள்.! அதிரடியாக வெளியான அரசின் அறிவிப்பு

rain in chennai

சென்னையைப் பொறுத்தவரை வரும் 18ஆம் தேதி வரை அதிகனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் வண்ணம் திறன் கொண்ட அலுவலகங்கள், தங்களிடம் பணியாற்றும் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் சென்னையை பொருத்தவரை அதிக அளவில் மழை நீர் தேங்கும் இடங்களில் அதிக விழிப்புடன் செயல்பட அதிகாரிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

Tap to resize

Chennai Rain

இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் வெதர்மேன் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று இரவு சென்னையில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று கூறி இருக்கிறார். கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து இப்பொழுது மழை மேகங்கள் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியுள்ளது என்றும், இரவு நேரத்தில் அது சென்னையை நோக்கி நகர்ந்து இரவு முதல் நாளை காலை வரை சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறி இருக்கிறார். அதேபோல கோவையை பொறுத்தவரை இந்த ஆண்டு அதிகமான மழைப்பொழிவு செய்த மாதமாக அக்டோபர் மாறி இருக்கிறது என்றும், மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை பொறுத்தவரை மீண்டும் அங்கு ஒரு புயல் உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

CM Stalin

இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் சாலைகளில் கடை வைத்திருப்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் உடனடியாக வெளியூர் செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் அதற்கு ஏற்ப தங்களுடைய பயணங்களை மாற்றிக் கொள்ளுமாறும், எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 4 நாட்கள் வீடுகளில் இருந்தே வேலை.! முதலமைச்சர் அதிரடி

Latest Videos

click me!