ration shop
மானிய விலையில் உணவு பொருட்கள்
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மானிய விலையிலும், இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிது. மாநிலத்திற்கு மாநிலம் வழங்கப்படும் உணவு பொருட்களிலும் வேறுபாடு உள்ளது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வேலைக்காகவும் இடம்பெயர்ந்து செல்பவர்களுக்காக ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இந்த திட்டம் உள்ளது. .
ration shops
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்
இந்த திட்டத்தின் மூலம் எந்த ஊரில் இருந்தாலும், எந்த மாநிலத்திலும் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன.
அவர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் மலை கிராமங்களில் உள்ள பகுதிகளிலும், குறைவான மக்கள் உள்ள இடங்களிலும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் நடமாடும் நியாயவிலைக்கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
RATION SHOP RICE
வீடுகளுக்கே இனி தேடி வரும் உணவு பொருட்கள்
இந்த நிலையில் உணவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்குவதற்கு பதிலாக வீடுகளுக்கு சென்றே வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் டெல்லியில் "கர்-கர் ரேஷன் யோஜனா" என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரேஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெல்லியில் உள்ள 72 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
e pos machine in Ration shop
கள்ளச்சந்தையில் உணவு பொருட்கள் விற்பனை
இதே போன்று மத்தியப் பிரதேச அரசு மாநிலத்தில் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள பழங்குடியினப் பகுதிகளில் "ரேஷன் ஆப்கே துவார்" என்ற திட்டத்தைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் ரேஷன் கடைகளுக்கு நீண்ட தூரம் சென்று வாங்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும், பண மோசடி செய்வதும் தடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ration shop
தமிழகத்தில் எப்போது.?
தற்போது முதல் கட்டமாக பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் வீட்டிலேயே ரேஷன் பெறும் வகையில், இந்த திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதே போன்று தமிழகத்திலும் வீடுகளுக்கே சென்று உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.