ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ஐடி நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வண்ணம் திறன் கொண்ட நிறுவனங்கள், தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. அதேபோல தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் வீடுகளில் தங்களுடைய வாகனங்களை நிறுத்த பயந்து, மேம்பாலங்களில் வாகனங்களை நிறுத்தும் பொதுமக்களிடம் போலீசார் அப்ராதம் விதிக்க கூடாது என்றும், சென்னை போக்குவரத்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே சிலரிடம் கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவதற்காக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.