Tomato onion price today : காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது. ரசம் முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி, வெங்காயம் இல்லையென்றால் சுவையை கொடுக்காது, எனவே மற்ற காய்கறிகளை மக்கள் வாங்குவதை விட தக்காளி வெங்காயத்தை தான் அதிகளவு வாங்குவார்கள். அதற்கு ஏற்றார் போல விளைச்சலும் அதிகளவில் இருக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு காய்கறிகளின் விளைச்சல் குறைந்ததால் விற்பனை விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ தக்காளி மற்றும் வெங்காயம் 100 ரூபாயை தாண்டியது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
ஏறி இறங்கும் தக்காளி விலை
மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சரிந்தது. 50 ரூபாய்க்கு 4 கிலோ தக்காளி கிடைத்தது. இதே போல 100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என பொதுமக்கள் அதிகளவு வெங்காயத்தையும், தக்காளியையும் வாங்கி சென்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தக்காளி விளைச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் விற்பனை விலை உயர்ந்துள்ளது.
உயரும் வெங்காயம் விலை
ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்க்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.24-க்கு விற்பனை ஆகிறது. வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
உருளைக்கிழங்கு ஒரு 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ ரூ. 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும்,
உயர்ந்தது கேரட், பீன்ஸ் விலை
முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.