டாஸ்மாக் வழக்கில் ட்விஸ்ட்! புதிய நீதிபதிகள் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் தமிழக அரசு!
TASMAC Case: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
TASMAC Case: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20 இடங்களில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் ரூ.1000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களையோ துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! ஒரே நேரத்தில் இரு நீதிபதிகள் விலகல்! அடுத்து விசாரிக்க போவது யார் தெரியுமா?
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் விவகாரத்தில் மார்ச் 25ம் தேதி வரை எந்தவித மேல் நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தவித காரணமும் தெரிவிக்காமல் இந்த வழக்கில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு நீதிபதிகளும் விலகுவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், கே.ராஜசேகர் அடங்கிய புதிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்: அமலாக்கத் துறையின் குறிப்பிட்ட அதிகாரிக்கு மட்டுமே சோதனை நடத்த அதிகாரம் உள்ளது. முறைகேடு நடத்திருப்பதாக கருதினால் டாஸ்மாக்கிடம் ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், 60 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை என்ற பெயரில் ஊழியர்கள் உட்பட அனைவரும் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி! நடந்தது என்ன?
இதையடுத்து நீதிபதிகள் தமிழக அரசு இரவு நேரத்தில் இதுபோன்ற சோதனையை நடத்தியது இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு சார்பில் இரவு நேரத்தில் நாங்கள் இதுபோன்று சோதனை நடத்தியது இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.