சர சரவென குறைந்த காய்கறி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் விலை இவ்வளவுதானா.?

First Published Oct 22, 2024, 7:32 AM IST

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சமீபத்திய மழை மற்றும் வெயிலின் காரணமாக அதிகரித்தது. தற்போது, வரத்து அதிகரிப்பால் விலைகள் குறைந்துள்ளன. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

tomato onion

விலை உயர்வும் பொதுமக்கள் அவதியும்

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் திடீரென வெளுத்து வாங்கிய வெயிலும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் காய்கறி வரத்து குறைந்ததையடுத்து  கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

அதிகரித்த காய்கறிகளின் வரத்து

ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும், பீன்ஸ் 250 ரூபாய்க்கும், அவரைக்காய் 100 ரூபாய்க்கும், வெங்காயம் 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 60 ரூபாய்  என இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.   இதனால் இல்லத்தரசிகள் அதிக விலை கொடுத்து வாங்க சிரம்ப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு குட் நியூஸ் தரும் வகையில் காய்கறிகளின் விலையானது சற்று குறைந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து  700 வாகனங்களில் இருந்து 7000 ஆயிரம் டன் காய்கறிகள் வந்து குவிந்தது. வரத்து அதிகரித்ததால் காய்கறி விற்பனை விலையும் ஓரளவிற்கு குறைந்துள்ளது. 
 

Latest Videos


குறைந்தது காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெட்ரோல் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Vegetables Price Today

காய்கறி விலை என்ன.?

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 10 முதல் 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

click me!