அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு
தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அடுத்தடுத்து இனிப்பான செய்திகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவித்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது.
50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.