koyambedu
தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊரில் உறவினர்களோடு கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஏற்றார் போல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்தநிலையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக ஏற்கனவே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் முடிவடைந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதில் இருந்தும் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,
14 ஆயிரம் சிறப்பு பேருந்து
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் அக்டோபர் 28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளனர். கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என மூன்று மையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 5.83 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kilambakkam
பேருந்து நிலையங்கள்
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு திரும்பும் வகையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டம். இந்தநிலையில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு மூன்று இடங்களில் இருந்து மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது..
புதிய பேருந்து நிலையங்கள்
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
2. கோயம்பேடு பேருந்து நிலையம்
3. மாதவரம் பேருந்து நிலையம்
பேருந்து நிலையம்- பேருந்துகள் செல்லும் வழி
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்
புதுச்சேரி / கடலூர் / சிதம்பரம் மார்க்கம் திருச்சி மார்க்கம்
மதுரை /தூத்துக்குடி / செங்கோட்டை மார்க்கம்
திருநெல்வேலி மார்க்கம்
சேலம் / கோயம்புத்தூர் மார்க்கம்
வந்தவாசி /போளூர் / திருவண்ணாமலை மார்க்கம்
கும்பகோணம் / தஞ்சாவூர் மார்க்கம்
Chennai bus
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு )
கிழக்கு கடற்கரை (ECR) மார்க்கம்
காஞ்சிபுரம் / வேலூர் / பெங்களூர் மார்க்கம்
திருத்தணி மார்க்கம்
மாதவரம் புதிய பேருந்து நிலையம்
பேருந்து செல்லும் இடங்கள்
பொன்னேரி / வாத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கம் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி சேலம் கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்
முன்பதிவு வசதி
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணைய தளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.