தீபாவளி கொண்டாட்டம்
படிப்பை முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு ஊர்களுக்கும், பல மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கும் பயணம் செய்கின்றனர். தங்களது வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் வேறு ஊரில், மொழி தெரியாத இடங்களில் பணி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு புதிய இடத்தில் பணிக்காக செல்கின்றனர்.
அப்படி வெளியூர் செல்லும் நபர்களுக்கு பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களும் தான் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். அப்போது தான் தங்களது குடும்பத்தை பார்க்கவும் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவும் செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும்.