5 கிலோ தக்காளி 100 ரூபாய்.! அப்போ ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை இவ்வளவா.?

Published : Nov 10, 2024, 07:18 AM ISTUpdated : Nov 10, 2024, 01:04 PM IST

கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

PREV
15
5 கிலோ தக்காளி 100 ரூபாய்.! அப்போ ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை இவ்வளவா.?
tomato onion

குறைந்தது காய்கறி விலை

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், அந்த வகையில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த காய்களிகளின் விலையானது குறைந்து வருகிறது. குறிப்பாக சமையலுக்கு அத்தியாவசிய தேவையான தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்து இருந்தது. தக்காளி மற்றும் வெங்காயம் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு விலையானது உயர்ந்தது.

அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 100ரூபாயை தொட்டது. வெங்காயமும் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் தக்காளி வரத்து சந்தைக்கு அதிகரித்ததை தொடர்ந்து விலையானது சரசரவென குறைந்தது. ஆனால் வெங்காயத்தின் விலை மட்டும் உச்சத்தில் நீடித்து வருகிறது.

25

குறைந்த விலையில் தக்காளி விற்பனை

விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் மக்கள் கூடும் இடங்களில் லாரிகள் மூலம் வெங்காயத்தை கொண்டுவரப்பட்டு ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயத்தை ரயில்களில் டன் கணக்கிலும் அனுப்பிவைக்கப்பட்டது. இதே போல தமிழக அரசும் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில்  தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 45 ரூபாய்க்கும்  விற்பனையானது. இதனை பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலையானது குறைந்துள்ளது. 

35

உச்சத்தில் வெங்காய விலை

45

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 400 முதல் 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இஞ்சி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

click me!

Recommended Stories