Annamalaiyar Temple: திருவண்ணாமலை கோவிலுக்கு போறீங்களா? இந்த தேதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

Published : Nov 09, 2024, 07:15 PM ISTUpdated : Nov 09, 2024, 07:17 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 14ம் தேதி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

PREV
15
Annamalaiyar Temple: திருவண்ணாமலை கோவிலுக்கு போறீங்களா? இந்த தேதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!
Tiruvannamalai

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலுக்கு தினமும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதும். அண்ணாமலையை தரிசனம் செய்வதற்கே கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆகிவிடும். 

25
Girivalam

அதேபோல் திருவண்ணாமலையில் சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரர் அருளை பெறுகின்றனர். 

இதையும் படிங்க: திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கையை மதிக்காத திருநங்கைகள்! நடுங்கும் பக்தர்கள்! நடந்தது என்ன?

35
Tiruvannamalai Annamalaiyar Temple

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரம் அன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அன்னாபிஷேகத்தில் சிவபெருமானுக்கு அன்னத்தினால் அலங்கரித்து தீப ஆராதனைகள் நடைபெறும். 

45
Annabhishekam

இந்த ஆண்டுக்கான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர் 6 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

55
Tiruvannamalai Annabhishekam

அன்னாபிஷேகத்தின் போது சிவனுக்கு படைத்த சாதத்தினை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

Read more Photos on
click me!

Recommended Stories