School Student
அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை போன்று பேச்சுப்போட்டிகள், விளையாட்டி உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்தும் கொடுப்பது மட்டுமல்லாமல் பரிசு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேச்சு போட்டி நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டும் பேச்சு போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tamilnadu Government
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ் வளர்ச்சித் துறையின் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டி நவம்பர் 12ம் தேதியன்று பள்ளி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேனிலைப்பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
School Student Competition
நவம்பர் 12ம் தேதியன்று கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் ஆர்.கே.நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும், தென்சென்னை அளவில் இராணி மேரி கல்லூரியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் இரு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000, மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு 1. அமைதிப் புறா நேரு 2. நவீன இந்தியாவின் சிற்பி 3. ஆசிய ஜோதி. ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம் முறையே, பின்வருமாறு 1. நேருவின் வெளியுறவுக் கொள்கை 2. நேரு கட்டமைத்த இந்தியா 3. நேருவின் பஞ்சசீலக் கொள்கை ஆகியவைகளாகும்.