நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தமிழகத்தில் எங்கெல்லாம் அதிக மழை இருக்கும்?

Ansgar R |  
Published : Nov 09, 2024, 11:54 PM IST

Tamil Nadu Rains :  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகவுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக நாளை இரவு முதல் நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

PREV
14
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தமிழகத்தில் எங்கெல்லாம் அதிக மழை இருக்கும்?
Tamil Nadu Rains

பிற ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த 2024ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பருவ மழை தொடங்கியிருந்தாலும், இப்போது வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அதிக மழை பெய்யவில்லை.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அக்டோபர் மாதம் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை என்றே கூறலாம். இருப்பினும் நாளை உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை இரவு முதல் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை அதிக அளவில் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Sundari Serial Actress: போதைப்பொருள் கடத்தல்! சென்னை மாலில் கையும் களவுமாக சிக்கிய பிரபல சீரியல் நடிகை!

24
Chennai Rains

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சில சாத்திய கூறுகள் நிலவியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் மியான்மர் நாட்டு கடலோர பகுதியில் அப்போது நிலவி வந்த காற்றின் சுழற்சியின் காரணமாக, தமிழகத்திற்கு வர வேண்டிய அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தடைபட்டது. ஆனால் தற்பொழுது மியான்மர் நாட்டு கடலோரப் பகுதியில் நிலவி வந்த அந்த காற்றின் சுழற்சியானது வலுவிழந்துள்ள நிலையில், இப்போது தென்மேற்கு வங்க கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.

34
heavy rain in tamilnadu

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும். அதிலும் எதிர்வரும் 24 மணி நேரத்தில் அது தமிழகத்தை நெருங்கி வந்து நாளை இரவு முதல் தமிழகத்தின் அனேக இடங்களிலும், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலான இடங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய கன மழை வரை எதிர் பார்க்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

44
heavy rain

அது மட்டுமில்லாமல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகைப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்றை தற்பொழுது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Annamalaiyar Temple: திருவண்ணாமலை கோவிலுக்கு போறீங்களா? இந்த தேதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

Read more Photos on
click me!

Recommended Stories