tomato onion
தக்காளி, வெங்காயம் விலை
சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அரிசி, அதற்கு அடுத்ததாக காய்கறிகள் தான், எனவே காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அந்த வகையில் தக்காளி, வெங்காயம் தேவை தான் அதிகம், இதனால் மக்கள் எந்த காய்களை வாங்குகிறார்களோ இல்லையோ அத்தியாவசிய தேவையான தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்குகிறார்கள். இந்த நிலையில் தான் இந்த இரண்டு காய்களிகளின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதன் படி ஒரு கிலோ 100 ரூபாய் என்ற அளவில் தக்காளி, வெங்காயத்தின் விலையானது அதிகரித்தது.
TOMATO PRICE
ஏறிய விலை திடீரென இறங்கியது
இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்திருந்தனர். சமையலில் ருசியை கொடுக்கக்கூடிய இந்த காய்கறிகள் இல்லாமல் சமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும் தரம் குறைந்த தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் காய்கறி சந்தையில் பொதுமக்கள் அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவிலேயே வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் காரிப் பருவ பயிர்கள் வரத்து, மழை பாதிப்பு குறைவு இதன் காரணமாக தக்காளி, வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் சரசரவென குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
tomato onion
சின்ன வெங்காயத்தின் விலை
அதே நேரத்தில் கடந்த மாதம் குறைந்திருந்த சின்ன வெங்காயத்தின் விலையானது தற்போது உயர தொடங்கியுள்ளது. சாம்பார், சட்னிக்கு அதிகளவு மக்கள் பயன்படுத்த சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினர். திடீரென ஏற்பட்ட விலை உயர்வால் வெங்காய சட்னி சமைப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் விலை தற்போது ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாயை தொட்டுள்ளது.
மேலும் வரும் நாட்கள் பனி காலமாக இருப்பதால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.
SMALL ONION
காய்கறி விலை என்ன.?
தன் படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
VEGETABLE PRICE
கேரட் விலை என்ன.?
அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு காலிபிளவர் ஒன்று 15 முதல் 20 ரூபாய்க்கு முருங்கைக்காய் ஒரு கிலோ கோல்கேட் வெண்டைக்காய் ஒரு கிலோ 35 40 ரூபாய்க்கு புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.