இலவசமாகவே பார்க்கலாம்.! சென்னை வானத்தில் குட்டிக்கரணம் அடிக்கப்போகுது ரஃபேல், சூகோய், தேஜாஸ்- எப்போ தெரியுமா.?

First Published | Sep 15, 2024, 6:17 AM IST

இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 8 ஆம் தேதி பிரம்மாண்ட விமான கண்காட்சி நடைபெற உள்ளது. ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் குழுவினரின் சாகசங்களும் இடம்பெறும்.

இந்தியாவின் விமானப்படை

இந்தியாவின் பாதுகாப்புபடைகளான முப்படைகள் கடற்படை, விமானப்படை, தரைப்படை, இதில் விமானப்படையில் சேர்வது இளைஞர்களின் கனவாக இருக்கும், நாட்டிற்கு சேவையாற்றுவதோடு விமானத்தில் உயர, உயர பறக்க ஆர்வம் இருக்கும். சின்னக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வானத்தில் பறக்கும் விமானத்தை அன்னாந்து பார்க்கும் பழக்கும் இன்னமும் உள்ளது.

அந்த வகையில் விமானப்படையின் சீருடையில் மிடுக்கான தோற்றம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. விமானப்படையில் இளைஞர்கள் இணைக்க பல்வேறு விழிப்புணர்வு முகாமும், வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற்று வருகிறது. விமானப்படையில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம்  வீரர்களைக் கொண்டுள்ளது. 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் கொண்டுள்ளது.  

சென்னையில் வான்வெளி சாகசம்

இந்திய விமானப்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. இயற்கை பேரிடர். போர் சூழலில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை மீட்பது, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்தியா தனது விமானப்படையை சிறப்பாக கட்டமைத்திருக்கிறது.  1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றன. சென்னையிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக விமானப்படையில் சாகச நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் சென்னையில் வான்வெளி சாகச நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.

Latest Videos


.ரஃபேல், சூகோய், தேஜாஸ்

இந்த சாகச நிகழ்வில் ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்கவுள்ளது. மேலும் ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்த உள்ளது.  இந்திய விமானப்படையின் முக்கிய விமாகனமாக கருதப்படுவது. ரஃபேல் விமானம், இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2 ஆயிரத்து 223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது.  

இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் இதர அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய விமானப்படையில் சுகோய்-30 போர் விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. 260 போர்விமானங்களை இந்தியாவிடம் உள்ளது.  

அட நம்ப இந்தியாவா இது? நாட்டின் அழகிய ரயில் நிலையங்களின் தொகுப்பு

அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் சாகச நிகழ்வு

அதிநவீன ராடார், ஆயுத கட்டுப்பாட்டு அமைப்புகள், புதிய ஆயுதங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. இதே போன்று இந்திய விமானப்படையில் உள்ள தேஜாஸ் உள்ளிட்ட முக்கிய விமானங்களும் இந்த விமானங்களின் சாகசங்கள் சென்னையில் நடைபெறவுள்ளது.  விமானப்படையின் 92 ஆவது ஆண்டு தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த சாகச நிகழ்வு அக்டோபர் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ளது.

Air Show

இலவசமாகவே பார்க்கலாம்

இதனை நேரில் பார்க்க பொதுமக்களை விமானப்படை அழைத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விமானப்படை தொடங்கியுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 08ஆம் தேதி காலை 9 மணிக்கு தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தேசிய அளவிலான கொண்டாட்டம், கண்கவர் அணிவகுப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. 

click me!