Dr ராம்தாஸ் டம்மி.. A ஃபார்ம் பி பார்ம் அன்புமணி மட்டுமே கையெழுத்திட முடியும்.. அதிர்ச்சியில் சுசீலா

Published : Sep 15, 2025, 12:36 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி தலைமைப் பொறுப்புக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸ் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில், அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

PREV
14
பாமகவில் உட்கட்சி மோதல்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான உள்கட்சி மோதல் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்து, குடும்பப் பிளவு மற்றும் கட்சி பிளவு என்ற நிலைக்கு வந்துவிட்டது. இந்த மோதல் கட்சியின் நிர்வாகம், தலைமை அதிகாரம், இளைஞர் அணி நியமனம் மற்றும் வன்னியர் சங்கம் பதவியிடங்களிலும் பிளவை ஏற்படுத்தியது.

 இந்த பரபரப்பான சூழலில் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், தான் தான் பாமக தலைவர் என அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பை நிராகரித்த அன்புமணி பொதுக்குழுவால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என பதிலடி கொடுத்தார்.

24
அன்புமணியை நீக்கிய ராமதாஸ்

ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் செயற்குழு கூட்டம் நடத்தி, அன்புமணியை "கட்சி விரோத நடவடிக்கை" என்று குற்றம் சாட்டினார். அன்புமணி தரப்பு இந்தக் கூட்டத்தை "சட்ட விதிகளுக்கு மாறானது" என்று கண்டித்தது. மேலும் ராமதாஸ் அன்புமணிக்கு 16 குற்றச்சாட்டுகளுக்கு (கட்சி விரோத செயல்கள், சமூக வலைதளங்களில் அவதூறு போன்றவை) ஆகஸ்ட் 31 வரை விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணியை "அடிப்படை உறுப்பினர்" பதவியிலிருந்து நீக்கியதாக அறிவித்தார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்றும், "இது கட்சியின் வரலாற்றில் மிகப்பெரிய விரோத நடவடிக்கை" என்றும் கூறினார்.

34
அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

ராமதாஸ் தானே கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறேன் என்றும் அறிவித்தார். இதற்கு அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே. பாலு "ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை; அன்புமணியே தலைவர்" என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்திதொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

 இதற்கான கடிதத்தையும் வெளியிட்டார். மேலும் அந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தலைவர், பொதுச்செயலளார், பொருளாளர் ஆகிய பதவி இடங்களுக்கான தேர்தலை ஒரு ஆண்டுக்கு நீட்டித்ததையும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

44
ஏ பார்ம்- பி பார்ம் கையெழுத்திட அனுமதி

அடுத்ததாக பாமக தலைவரான அன்புமணிக்கே தேர்தல் நேரத்தில் ஏ பார்ம் மற்றும் பி பார்ம் படிவத்தில் கையெடுத்திட அனுமதி வழங்கியுள்ளதாகவும், பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரிந்து சென்றவர்கள் அன்புமணி தலைமையே ஏற்கலாம் என கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் ராமதாசின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் ராமதாஸ் இரண்டாவது மனைவியான சுசீலா ஏமாற்றம் அடைந்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories