பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழ்மையான வீடுகளில் காலை உணவு கிடைக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ருசியான உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக புதுமைப்பெண் திட்டமாகும், அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கு சென்றால் மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இது ஏழ்மையான மாணவிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. இதே போல தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிற்றது. இந்த திட்டத்தால் மாணவர்களின் அத்தியாவசிய செலவுக்கு உதவியாக அமைந்துள்ளது.
மாணவர்களை பாதுகாக்கும் ஆசிரியர்கள்
இது போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களும் தேவைக்கு ஏற்ப நிரப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மற்றோரு தாயாக இருப்பது ஆசிரியர்கள் தான். அவர்களின் பொறுப்பில் தான் மாணவ, மாணவிகள் உள்ளனர். காலையில் பள்ளியில் வந்து சேர்ந்ததில் இருந்து திரும்பி வீடு போகும் வரை ஆசிரியரின் பங்கு முக்கியமானது.
பெற்றோரால் செல்லிக்கொடுக்க முடியாத பல விஷயங்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். நல்வழிப்படுத்தும் ஆசானாகவும் ஆசிரியர்கள் திகழ்ந்து வருகிறார்கள். இப்படி பல வகையிலும் ஆசிரியர்களின் பங்கு மாணவர்களோடு இணைந்து உள்ளது. இந்தநிலையில் தான் கடந்த ஒரு சில மாதங்களாகவே பள்ளகளில் அடுத்தடுத்து நிகழ்வு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
குறிப்பாக கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு என்.சி.சி முகாம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இரவில் பள்ளி வளாகத்தில் தங்கிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து என்சிசி முகாம் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இதே போன்ற பல இடங்களிலும் மாணவிகளுக்கு எதிரான சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கான மோட்டிவேஷன் பேச்சுக்காக அழைத்து வரப்பட்ட நபர் ஆன்மிகம், முன் ஜென்மம், கர்மா என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடம் மூட நம்பிக்கை
பரம்பொருள் என்ற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்பவர் முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு தான் தற்போது கண் இல்லாமலும், கால் இல்லாமலும் பிறந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் ஏழைகளாக இருப்பதற்கும் முன் ஜென்மத்தில் செய்த தவறு தான் காரணம் என பேசினார். இந்த பேச்சிற்கு அப்பளியில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் மஹாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளுவர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பாக முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Ashok Nagar School
பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
அதில், முதன்மை கல்வி அதிகாரியின் அனுமதி இல்லாமல், கல்விக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சியையோ, விழாவையோ பள்ளியில் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், விளையாட்டு, பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்துக்குள் அனுமதியில்லாமல் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது எனவும், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களிடம் நேரடியாக பேச அனுமதிக்கக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
school student
நிகழ்ச்சிகள் நடத்த தடை
விடுமுறை நாட்களில், பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி மட்டுமே, அரசு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கக மருத்துவ குழுவினரை தவிர, மற்ற குழுவினரை மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கூடாது. அரசு ஊதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்டோரை தவிர, மற்ற வெளியாட்களை வைத்து பாடங்கள் நடத்த அனுமதித்தால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .
school student
மதிய உணவுக்கு வெளியே செல்ல தடை
மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்மறையாகவோ, இரட்டை அர்த்தத்திலோ, தொலைபேசியிலோ பேசக்கூடாது. மாணவர்கள் வருகை தொடர்பாக, பெற்றோரிடம் மட்டுமே பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது