இனி வெங்காய விலை இவ்வளவு தான்.! மூட்டை, மூட்டையாக தமிழகத்திற்கு வரப்போகுது- இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்

First Published | Sep 9, 2024, 7:15 AM IST

தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு வெங்காயத்தை மலிவு விலையில் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.விரைவில் தமிழகத்திலும் மக்கள் கூடும் இடங்களில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

Onion Price Today

கிடு,கிடுவென உயர்ந்த வெங்காயம் விலை

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த கன மழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி சந்தைக்கு குறைவான அளவே காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. தெலுங்கானா, ஆந்திர போன்ற அண்டை மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் பயிரடப்படுகிறது.

 இங்கு விளையும் வெங்காயம் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமில்லாமல் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தொடர் மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனை விலையானது கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. இதனிடையே ஒரு சில காய்கறிகளை தவிர்த்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. 

Vegetables Price Koyembedu

கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,

சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும விற்பனை செய்யப்படுகிறது.  

Tap to resize

Vegetables Price Today

ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்

பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது இதே போல வெங்காயத்தின் விலையாது கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குறைவாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து விட்டது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் 1 கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

onion

சமையலில் வெங்காயம்

சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம் ஆகும். வெங்காயம் இல்லாத சமையல் செய்வது இல்லத்தரசிகளுக்கு சிரமமான வேலையாகும். எனவே காய்கறி சந்தையில் 5 கிலோ 10கிலோ கணக்கில் வாங்கி சென்ற வெங்காயத்தை தற்போது ஒரு கிலோ,அரைக்கிலோ என வாங்கும் நிலை உருவாகியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வால் ஓட்டல்களில் வெங்காயம் சார்ந்த உணவு பொருட்கள் சமைப்பதை குறைத்துக்கொண்டுள்ளனர். 

இதனிடையே வெங்காயத்தின் விலையானது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தற்போது களத்தில் இறங்கியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெங்காயத்தை சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. 

வெங்காயம் விற்பனையை தொடங்கிய மத்திய அரசு

தற்போதுள்ள நிலையில் மத்திய அரசிடம் வெங்காய கையிருப்பானது, 4.7 லட்சம் டன்னாக உள்ளது. வெங்காய விற்பனையில் மத்திய அரசு இறங்கியுள்ள நிலையில் வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய திட்டம் போட்ட நபர்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் பெரிய வெங்காயம் சில்லரை விலையில் விற்பனை செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

வாகனத்தின் மூலமாகவும், ரேஷன் கடைகளிலும் விற்பனையை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலையானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை துவக்கம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து மற்ற மாநிலங்களிலும் வெங்காய விற்பனையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத்  போன்ற மாநிலங்களிலும் விற்பனையை தொடங்கப்படவுள்ளது. 

onion

தமிழகத்திலும் வெங்காய விற்பனை

இதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெங்காயத்தை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாகனத்திலும், நியாயவிலைக்கடைகளிலும் விறைபனை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தை போல் தமிழக அரசும் கூட்டுறவு துறையின் மூலம் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Latest Videos

click me!