College Student: குட் நியூஸ்! மாணவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி! வெளியான சூப்பர் அறிவிப்பு!

First Published | Sep 8, 2024, 5:07 PM IST

College Student: தமிழக அரசு உயர்கல்வி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆராய்ச்சி படிப்புகளுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

திமுக அரசு பதவியேற்றதையடுத்து மகளிர் உதவி தொகை, உயர்கல்வி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சூப்பர் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நெறிமுறைகள் வெளியிப்படுகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சம் அனுமதித்து இளநிலை மற்றும் முதுகலை பொறியியல், முதுகலை தொழில் படிப்புகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கப்படுகிறது. புதுமையான மாணவர் ஆராய்ச்சித் திட்டங்களை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வாயிலாக வேளாண்மை, உயிரியல், வேதியியல், பொறியியல், சுற்றுப்புறவியல், மருத்துவம், கால்நடையியல், இயற்பியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பிரிவுகளில் செயல்படுத்த ரூ.10,000 வரை நிதியுதவியாக வழங்குகிறது.

இதையும் படிங்க: Teacher Shankar Profile: மகாவிஷ்ணுவை ஓட ஓட கதறவிட்ட தமிழாசிரியர்! யார் இந்த சங்கர்?

Tap to resize

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் வல்லுநர்களால் புதுமை மற்றும் உண்மைத்தன்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது, ​​சமூகப் பிரச்சினைகளுக்கான பயன்பாடு மற்றும் பொருந்தக்கூடிய தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாணவர்களிடையே உள்ள திறமைகள் நமது மாநிலத்தின் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது. இந்த மாணவர் கண்டுபிடிப்புகள், வடிவமைப்பு, யோசனைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க:  School Education Department: முடியவே முடியாது! ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழ்களில் வெளியிட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இத்திட்டம் மாணவர் சமுதாயத்தை அறிவியல் மனப்பான்மையை நோக்கித் தூண்டுகிறது. இந்நிலையில் ஒப்புதல் பெறப்பட்ட 1010 மாணவர் ஆராய்ச்சி திட்டங்கள் மன்றத்தின் இணையதளத்தில் www.tanscst.tn.gov.in < http://www.tanscst.tn.gov.in > பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Latest Videos

click me!