Tamilnadu Government: தமிழக அரசு கொடுக்கும் ரூ.3,000! யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

First Published | Sep 8, 2024, 3:28 PM IST

Tamilnadu Government: திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மற்றும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

DMK Government

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Magalir Urimai Thogai

அதன்படி திமுக தேர்தல் வாக்குறுதி படி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை  கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

Tap to resize

இந்த உரிமைத்தொகைக்கான நிபந்தனைகளை தளர்த்தி, மேலும் பயனாளர்களை இணைக்கும் வகையில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களும், புதிதாக திருமணமான பெண்களும் இணைக்கப்படவுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இணைக்கப்பட உள்ளனர். இம்மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14-ம் தேதியே பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இதையும் படிங்க: Teacher Shankar Profile: மகாவிஷ்ணுவை ஓட ஓட கதறவிட்ட தமிழாசிரியர்! யார் இந்த சங்கர்?

tamil puthalvan thittam

புதுமைப்பெண் திட்டம்: 
 

அரசு பள்ளிகளிலிருந்து உயர் கல்விக்காகக் கல்லூரி செல்லும் மாணவிகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப் பெண் திட்டம் தமிழக அரசால் கொண்டுவரபட்டது. அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 சமூக நலத்துறை மூலமாக நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகள், கல்லூரி மூலமாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தொகையும் மாணவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: School Education Department: முடியவே முடியாது! ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

Pudhumai Penn Scheme

தமிழ்ப் புதல்வன் திட்டம்:

அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இத்திட்டத்திற்கான இரண்டாவது தவணையான ரூ.1000 இந்த மாதம் வழங்கப்படவுள்ளது. எனவே இந்த மூன்று திட்டங்களின் படி 3000 ரூபாய் வருகின்ற 14ஆம் தேதியே அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Latest Videos

click me!