Published : Feb 28, 2025, 10:37 AM ISTUpdated : Feb 28, 2025, 12:23 PM IST
தமிழக அரசின் வருவாய் பெருக்கத்திற்காக பதிவுத்துறை மார்ச் 2025 மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பதிவு அலுவலகங்களை திறக்க உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாள் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஸ்டார் 2.0 திட்டப்படி இணையவழி பதிவு தடையின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் பத்திர பதிவு செய்யும் மக்களுக்கு குட் நியூஸ்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக அரசு பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு கொண்டு சேர்க்க பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லையென தமிழக அரசு கூறி வரும் நிலையில்,
தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் மற்றும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை பணத்தை அள்ளிக்கொடுக்கிறது. அதன் படி நாள் தோறும் மது விற்பனையும், பத்திர பதிவு மூலமாகவும் நிதியானது கொட்டுகிறது.
24
பத்திர பதிவு வரி வருவாய்
அந்த வகையில் வணிகவரித் துறையில் 2024-2025 நிதி ஆண்டின் 31.01.2025 வரையில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் 31.01.2025 வரை கூடுதலாக ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் வருவாய் அதிகரிக்கும் நோக்கிலும், பத்திர பதிவு செய்யவரும் மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பதிவுத்துறை அரசின் வருவாய் பெருக்கும் நோக்கில் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
34
அனைத்து சனிக்கிழமையும் இயங்கும்
மேலும் பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவு விதி-4-க்கு உட்பட்டு பதிவுச் சட்டம் கீழுள்ள Table of fees om 17(3)-60 abc கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படவேண்டும் என்ற விபரம் கூறப்பட்டுள்ளது.
44
கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு
மேலும் அன்றைய தினங்களில், ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான Help Desk மற்றும் Help Line வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட TCS மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பத்திர பதிவு துறை செயல்படுவதை துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.