சென்னை திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வுச் செய்யப்பட்ட 2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிர் காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கின்றனர். தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருப்பதற்கு திமுக ஆட்சிக் காலங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புகள் தான் காரணம் என கூறியிருந்தார். இந்நிலையில் திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியால், தமிழக மருத்துவத் துறை குறிப்பாக, அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
25
Former Health Minister Vijayabaskar
இது தொடர்பாக அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஊரில் கல்யாணம் - மார்பில் சந்தனம்' என்று கிராமப்புறங்களில் மைனர்கள் சுற்றித் திரிவதுபோல், விதிவசத்தால் தமிழகத்தின் முதலமைச்சராகிய ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் மார்தட்டிக்கொண்டு அலைகிறார். மருத்துவத் துறையில் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கி, தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு, ஏதோ இவரது தந்தை கருணாநிதி செய்த சாதனைகள்தான் காரணம் என்று, மருத்துவத் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
35
Medical Department
அதனால்தான் மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டது என்று, தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாதென்று நினைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசி உள்ளார். முழுவதும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்த கால அளவை, தமிழ்நாடு 2018-லேயே அடைந்ததால், மத்திய அரசின் பரிசைப் பெற்றோம். அதேபோல், உடல் உறுப்பு தானத்திற்காக 2015 முதல் 2020 வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் மத்திய அரசின் விருது பெற்றோம். பல சாதனைகளை மருத்துவத்துறையில் சாதித்துக் காட்டினோம்.
45
DMK Stalin model rule
ஆனால், திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றவுடன், மருத்துவ வசதிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் புரட்சிகரமான. திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியால், தமிழக மருத்துவத் துறை குறிப்பாக, அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், சுமார் 2500 மருத்துவர்களை நியமனம் செய்கிறேன் என்று அறிவித்து, மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டு, `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல்' சுமார் 500 இளம் மருத்துவர்களை வீதியில் நிறுத்தி போராட வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கியதுதான் இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை.
55
VijayaBaskar
அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்து, இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். இந்த ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் படும் வேதனைகளை, களையக்கூடிய திருநாள் விரைவில் `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் தலைமையில் மலரும்” என்று தெரிவித்துள்ளார்.