2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக புதிய கூட்டணி வியூகம் அமைத்து வருகிறது. விரைவில் யாரும் எதிர்பாராத கூட்டணி உருவாகும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி ரெடி.! இப்பவே வெளியில் சொன்னா பெட்டியை கொடுத்து மாற்றிடுவாங்க
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே உச்சக்கட்ட போட்டி நிலவி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறியாக வைத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் வியூகத்தை அமைத்து வருகிறது. அந்த வகையில் பலம் பொருந்திய திமுக கூட்டணியை வீழ்த்த அதற்கு இணையாக புதிய கூட்டணியை உருவாக்க அதிமுக காய் நகர்த்தி வருகிறது.
அதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளோடு விஜய்யின் தவெகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இருந்து அதிகளவு தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது.
24
தமிழகத்தில் கொலை, கொள்ளை
எனவே தேர்தல் நெருக்கத்தில் தான் இரு தரப்பிலும் கூட்டணி உடன்பாடு ஏற்படுவது தொடர்பாக உறுதியான தகவல் வெளியாகும் என தெரியவருகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய தகவலை அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது என விமர்சித்தார்.
34
நாடகம் ஆடும் திமுக அரசு
எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையாகிறது. ஸ்கூல் அருகில் கூலிப் விற்பனை செய்யப்படுகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பல்லுக்கு இடையே அதை இடுக்கி கொண்டு அனைத்து தவறுகளும் செய்கின்றனர். மத்திய அரசின் நிதிக்காக மும்மொழி கொள்ளையை ஏற்றுக்கொண்டு ஆதரித்து கடிதம் கொடுத்துவிட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்றவுடன் இன்று எதிர்ப்பது போல் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர் என கூறினார்.
44
யாரும் எதிர்பாராத கூட்டணி ரெடி
தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தவரை தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக கூறினார். நீங்கள் எதிர்பார்க்காத கூட்டணி விரைவில் வரப்போகிறது. அதற்குரிய வியூகத்தை எடப்பாடியார் அறிவித்து விட்டார்கள். கூட்டணிக்காக நாம் யாரையும் போய் கேட்கவில்லை. சூழ்நிலை, தெய்வத்தின் அருளால் அப்படியே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வெளிவர போகிறது. இப்போது சொன்னால் உடனே போய் பெட்டியை கொடுத்து விடுவார்கள் அதனால் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறோம் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.