சீமானுக்கு அளிக்கப்பட்ட சம்மனை அவரது உதவியாளர் கிழித்ததற்காகவும், சீமான் வீட்டு காவலாளி போலீசாரை தாக்கிய சம்பவத்திலும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து வருகிற மார்ச் 13ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.
சிறையில் சீமான் வீட்டு காவலாளி, உதவியாளர் - கொந்தளிக்கும் நாம் தமிழர் தம்பிகள்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், 6 முறை கருகலைப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிபதி இந்த வழக்கை சர்வ சாதாரணமாக முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
25
சீமானுக்கு சம்மன்
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து போலீசார் விஜயலட்சுமியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி மீண்டும் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இதனையடுத்து சீமானை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. அதன் படி நேற்றைய தினம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பணிக்காக வெளியூர் செல்வதால் 4 வார காலம் அவகாசம் கேட்டிருந்தார்.
35
சம்மனை கிழித்த சீமான் உதவியாளர்
இதனையடுத்து போலீசார் நேற்று சீமான் வீட்டில் மீண்டும் சம்மனை ஒட்டினர். அதில் இன்றைய தினம் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்மனை வீட்டில் இருந்த உதவியாளர் கிழித்தெறிந்தார். இதனால் அதிருப்தி அடைந்த போலீஸ் இது தொடர்பாக சீமானின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆய்வாளரை உள்ளே விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். மேலும் காவலாளி அமல்ராஜ்க்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காவல் ஆய்வாளர் சீருடை கிழிந்தது. மேலும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
45
போலீசார் மீது தாக்குதல்
இதனையடுத்து காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக, அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பொது இடத்தில் பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி, சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது துப்பாக்கியை பயன்படுத்துதல், துப்பாக்கி உரிமத்தின் நிபந்தனைகளை மீறி செயல்படுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
55
சிறையில் சீமான் உதவியாளர்
இதனையடுத்து இன்று காலை சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அமல்ராஜ் மற்றும் சுபாகரை மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இந்த இரண்டு பேரையும் சிறையில் அடைத்தனர். முன்னதாக சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற நுழைவு வாயில் திறக்கவில்லையென்றால் உடைப்போம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.