அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்தாகுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை! பதற்றத்தில் திமுக!

Published : Feb 28, 2025, 10:18 AM ISTUpdated : Feb 28, 2025, 10:21 AM IST

செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சிறப்பு நீதிமன்றம் சீலிட்ட கவரில் நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

PREV
15
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்தாகுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை! பதற்றத்தில் திமுக!
Minister Senthil Balaji

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3  குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

25
Senthil Balaji News

இந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையால்  2023ம்  ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில்  471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை வேண்டுமென்றே தாமதம் செய்யும் நோக்கில் தமிழக அரசும், போலீசாரும் ஈடுபட்டு வருவதாக  ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்தாகிறதா? அமலாக்கத்துறை எடுத்த அதிரடி முடிவு!

35
Supreme Court

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது  உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையின் நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு  வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளின் விசாரணை தொடர்பான தற்போதைய நிலவர அறிக்கையை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

45
Enforcement Directorate

செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதால், அரசு தரப்பு சாட்சிகள் தைரியமாக சாட்சியம் அளிக்க முன்வர மாட்டார்கள் என்பதால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கத் துறை சாரப்பில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. 

55
Senthil Balaji Case

அதேபோல் வித்யாகுமார் தாக்கல் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராகத் தொடர்ந்தால் என்னவாகும்? செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியில் நீடிக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories