பங்காளி துரோகம்..! கே.சி.வீரமணியுடன் சிண்டிக்கேட்..? அதிமுக-பாமகவுக்குள் திமுக எம்.எல்.ஏ-வின் சகுனித்தனம்..!

Published : Feb 04, 2026, 01:13 PM IST

தன் எதிராளியிடம் மோத வேண்டுமா ? ஒருவேளை தோற்றால் கவுரவ பிரச்சினை ஆகிவிடும் என்பதாலே எங்கள் மாஜி அமைச்சரோடும் அண்டர் டீலிங் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம்.

PREV
14
பாமகவுக்கு திருப்பத்தூர் தொகுதி?

தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வியூகம் என றெக்கைகட்டி பறந்து வருகின்றன. ஆளும் திமுக கூட்டணியில் இணைய தேமுதிக , ராமதாஸ் (பாமக,) போன்ற கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எதிரணியான அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள், அணிகளை இணைக்கும் முயற்சிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

எடப்பாடியை சந்தித்த அன்புமணி பாஜக- அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததாக அறிவித்தார். பாமகவுக்கு 17+1 என தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டதாகவும் தகவல்கள். இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக திமுக எம்.எல்.ஏ நல்லதம்பியே செய்தியை கசிய விட்டு வருவதாக கொந்தளிக்கிறார்கள் திருப்பத்தூர் அதிமுகவினர்.

24
கே.சி. வீரமணியிடம் டீலிங்?

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘திருப்பத்தூர் தொகுதியில், தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ., நல்லதம்பி மூன்றாவது முறையாக சீட் கேட்க தயாரானவருக்கு போட்டியாளராக பார்க்கப்பட நகர செயலாளர் ராஜேந்திரன், நல்லதம்பியோடு சுற்றி வருகிறார். இதனால், போட்டியாளர்களே இல்லை என தெனாவெட்டில் உள்ள நல்லதம்பி, அதிமுகவில் சீட் கேட்கும் தனது பங்காளி டாக்டர்.திருப்பதி போட்டியாளராக வந்துவிட கூடாது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்து விடும்படி முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியிடம் டீலிங் செய்துள்ளதாக என்னை போன்றோர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஜி அமைச்சர் வீரமணியின் அதி தீவிர ஆதர்வளர்களான டிடி.குமார் , டிடி.சங்கர் ஆகியோர் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளால் பெரிதும் எதிர்பார்கப்பட்ட டாக்டர் திருப்பதிக்கு சீட் கிடைக்குமா என சந்தேகமாக இருக்கிறது.

34
நல்லதம்பியின் அரசியல் விளையாட்டு

திமுக எம்எல்ஏ., நல்லதம்பியும், அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் டாக்டர்.திருப்தியும் பங்காளிகள். இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அதனால்தான் வேண்டப்பட்ட அதிமுகவினரிடம், ‘‘டேய் அந்த ஆளை (டாக்டர் திருப்பதி) வேறுவேலை பார்க்க சொல்லுடா.. பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய போறாங்க’’ என்று சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இடத்தில் நக்கலடித்தார். இதை நானே நேரடியாக கேட்டேன். எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் காண்ராக்ட் தொழிலில் நல்ல நெருக்கமாக இருந்து வருகிறது. ஆட்சி மாறினாலும், இவர்கள் தொழில் கூட்டணி மாறவில்லை. அதேபோல் சாதி பின்புலமுள்ள மாஜி அமைச்சர்களோடு திமுக எம்எல்ஏ., நல்லதம்பிக்கும் தொடர்பு இருக்கிறது.

தன் எதிராளியிடம் மோத வேண்டுமா ? ஒருவேளை தோற்றால் கவுரவ பிரச்சினை ஆகிவிடும் என்பதாலே எங்கள் மாஜி அமைச்சரோடும் அண்டர் டீலிங் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி, பாமக இரண்டாகப் பிரிந்து கிடக்கும் இந்த நேரத்தில் தொகுதி முழுவதும் அதிருப்தியில் இருக்கும் நல்லதம்பி மூன்றாவது முறையாக வென்று விடலாம் என கனவு காண்கிறார். டாக்டர். திருப்பதி அண்ணனுக்கு சீட் கொடுத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும். இல்லையென்றால் நல்லதம்பியை எதிர்கொள்வது கடினம்’’ என்றார்.

44
மறுக்கும் வீரமணி- நல்லதம்பி

சர்ச்சை குறித்து திமுக எம்எல்ஏ., நல்லதம்பியிடம் விசாரித்தோம். ‘‘பொய்யான தகவல். அப்படி யாரிடமும் பேசியதில்லை. பேசவேண்டிய அவசியமுமில்லை. திருப்பத்தூர் தொகுதி திமுக கோட்டை. இங்கு யார் நிறுத்தப்பட்டாலும் திமுக வெல்வது உறுதி’’ என்றார் .

அண்டர் டீலிங் விவகாரம் குறித்து மாஜி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கேட்டதற்கு, ‘‘நான் தேர்தலில் நிற்பதைக்கூட தலைமை தான் முடிவெடுக்கும். நீங்கள் கேட்பது ஆளுங்கட்சியினரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை எங்கள் அணியே நிச்சயம் வெல்லும்’’ என முடித்துக் கொண்டார்.

2001 -2006 திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக தொடர்ந்து வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக வேட்பாளர், நல்லத் தம்பியிடம் தோல்வியை தழுவினார்.

எதிர்வரும் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி, பாமகவுக்கு திருப்பத்தூர் தொகுதியை அதிமுக தலைமை ஒதுக்கீடு செய்ய போவதாகவும், திமுக எம்எல்ஏ., நல்லத்தம்பியே பேசியதாக கூறப்படும் தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories