Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்வீட் நியூஸ்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! தமிழக அரசு சொன்ன செம அப்டேட்!

Published : May 24, 2026, 01:39 PM IST

Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் தவெக அரசு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது. அது என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ரேஷன் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. மக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். ஆனால் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது சவாலாக இருந்தது.

24
தாயுமானவர் திட்டம்

இதனை கருத்தில் கொண்ட கடந்த திமுக அரசு, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. இத்திட்டத்தின்படி 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

34
தவெக ஆட்சியிலும் தாயுமானவர் திட்டம் தொடரும்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாறியது. தவெக ஆட்சியில் அமர்ந்தது. நடிகர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் 'தாயுமானவர் திட்டம்' தொடருமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் முந்தைய திமுக அரசில் தொடங்கப்பட்ட 'தாயுமானவர் திட்டம்' தொடரும் என்று விஜய்யின் தவெக அரசு தெரிவித்துள்ளது.

'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த சேவை தடையின்றி தொடர போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்' என்று தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
திமுக அரசு திட்டங்களை தொடரும் தவெக அரசு

தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வரலாறு படைத்த தவெக தலைவர் விஜய், முந்தைய திமுக அரசின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டங்கள் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் புதுமைப்பெண் திட்டத்துக்கான தொகை மற்றும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 ஆகியவற்றை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தவெக அரசு வரவு வைத்துள்ளது. இதே வரிசையில் தாயுமானவர் திட்டமும் தொடரும் என தவெக அரசு தெரிவித்துள்ளது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories