சென்னை மக்களே இன்று, நாளையும் உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

Published : Apr 15, 2026, 04:09 PM IST

தமிழகத்தில் வெயில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், உள் மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

PREV
15
வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக கரூர், தர்மபுரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாமல் 100 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று கரூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் 104 டிகிரியும், சேலம், மதுரை, நாமக்கல், ஈரோடு, கோவையில் 102 டிகிரி வெயில் மண்டையை பொளக்கிறது.

25
வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கும்

பல்வேறு பகுதிகளில் வெயில் சதம் அடித்து வரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இதனை பொருட்படுத்தாமலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அதிக வெப்பம் நிலை அதிக ஈரப்பதத்தால் அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

35
இராமநாதபுரம் மழை எச்சரிக்கை

அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் கிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, வடக்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
வெயில் கொளுத்தும்

இன்று முதல் 19 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

55
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories