மாணவர்களே தயாரா? இமெயில் ஐடியோட ரெடியா இருங்க - அதிரடி அப்டேட் கொடுக்கும் தமிழக அரசு

Published : Dec 21, 2024, 07:30 AM ISTUpdated : Dec 21, 2024, 07:35 AM IST

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தயாரித்து அதனை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
15
மாணவர்களே தயாரா? இமெயில் ஐடியோட ரெடியா இருங்க - அதிரடி அப்டேட் கொடுக்கும் தமிழக அரசு
Government Schools

இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித் துறையாக இருந்தாலும் சரி, உயர்கல்வித் துறையாக இருந்தாலும் சரி தமிழகம் எப்பொழுதும் முன்னோடியாகவே இருந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மேற்கொள்ளும் புதிய முன்னோடி திட்டங்கள் தான் இந்த முன்னிலைக்கு காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

25
Government Schools

தற்போதைய டிஜிட்டல் உலகில் கணினி கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதனை மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலேயே எளிதாக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மையமாகக் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையும் அணுப்பப்பட்டுள்ளது.

35
Government Schools

அறிக்கை தொடர்பாக பள்ளக்கல்வித் துறை இயக்குநர் கூறுகையில், பள்ளிப்பருவத்தில் மேல்நிலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி (E Mail ID - இ மெயில் ஐடி) முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு கலை அறிவியல் படிப்பு, பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர இது முக்கியமானதாக உள்ளது.

45
Government Schools

அதன்படி தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்க பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு இ மெயில் ஐடி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட நிகழ்வுகளில் மாணவர்கள் நேரடியாகவே தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் இ மெயில் ஐடி தொடங்க ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

55
E Mail ID

அதன்படி பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு இமெயில் ஐடி தொடங்கப்பட்டு அதனை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories