Published : Dec 20, 2024, 10:57 PM ISTUpdated : Dec 20, 2024, 11:07 PM IST
Tamilnadu Government: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி டிசம்பர் 21 அன்று நடைபெறும். முதல் பரிசு ரூ.2 லட்சம். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று சிறந்த அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
அரசு துறையில் பணியாற்றும் ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சூப்பர் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய ஆசிரியர்களை ஊக்குவிக்க மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
25
thirukkural quiz competition
அதன்படி குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில், மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது.
இந்த போட்டியின் மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல் நிலை எழுத்துத் தேர்வில் பங்குபெறும் வகையில், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக Google Link அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பகிரப்பட்டு பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
45
Government Employee
பங்கேற்க தகுதி உள்ள போட்டியாளர்கள், முன்பதிவு செய்ய முடியாத பட்சத்தில், நேரடி பதிவு (SPOT REGISTRATION) முறையில் நேரடியாக போட்டி நடைபெறும் தேர்வு மையத்திற்கு சென்று பங்கேற்கலாம். இந்த முதல்நிலைத் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் அனைவரும் பிற்பகல் 1 மணிக்கு முன்பாக அந்தந்த தேர்வு மையத்திற்கு அடையாள அட்டையுடன் வருகை புரிந்து, பதிவு செய்து பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதில் சிறந்த மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் பங்கேற்கும் பிற அணிகளுக்கு ஊக்கப்பரிசாக ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.