டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் மாற்றம்!

Published : Dec 20, 2024, 06:32 PM ISTUpdated : Dec 20, 2024, 11:41 PM IST

TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. பிப்ரவரி 8 மற்றும் 23 தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

PREV
15
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் மாற்றம்!
TNPSC

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,540 காலி பணியிடங்களுக்காக செப்டம்பர் 14ம் தேர்வு நடைபெற்றது. இதற்கு  7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களில் அதாவது டிசம்பர் 12-ம் தேதி முடிவுகள் வெளியாகி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இன்ப அதிர்ச்சி கொடுத்து. 

25
TNPSC Group 2 Exam

இதனையடுத்து முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது. 

இதையும் படிங்க: TNPSC: தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு இதோ!

35
TNPSC Exam Date

அதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள் பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

45
TNPSC Group 2 Exam Pattern

தொடர்ந்து தேர்வு மையங்களும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இதையும் படிங்க:  TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! மிஸ் பண்ணிடாதீங்க!

55
Optical Mark Recognition

சமீபத்தில் கணினி வழியில் நடத்தப்பட்ட இரண்டால் நிலைஅரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில தேர்வர்களால் தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனையடுத்து தேர்வர்களின் கோரிக்கையினை ஏற்று ரத்து செய்யப்பட்டது.  அதனைக் கருத்தில் கொண்டு தற்போது, கணினி வழியில் நடத்தப்பட இருந்த குரூப் 2ஏ இரண்டாம் தாள் ஓஎம்ஆர் (Optical Mark Recognition)) முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories