ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.தொடர் மழை காரணமாக நெல்லை நகரம் வெள்ளத்தில் மிதந்தது.
தென்காசி மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டமும் வெள்ள பாதிப்பால் சிக்கித் தவித்தது. மேலும் கடலுர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் மற்ற இடங்களில் பரவாலாக மழையும் பெய்தது.