10வது படித்திருந்தாலே போதும்.! 8997 சமையல் உதவியாளர் பணி- உடனடியாக நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு

Published : Dec 20, 2024, 07:14 AM ISTUpdated : Dec 20, 2024, 07:21 AM IST

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

PREV
15
10வது படித்திருந்தாலே போதும்.! 8997 சமையல் உதவியாளர் பணி- உடனடியாக நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு
midday meal

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் பெரிய அளவில் பயன் அடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டததில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி சமையல் உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள 8997 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 

25
school food

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சத்துணவுப் பணியாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பு கலைமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். 

35
Cooking staff

பதவி

அமைப்பாளருக்கு  7700 ரூபாய்  முதல் 24,200 வரை

சமையலருக்கு  4100 ரூபாய் முதல் 12500 வரை

சமையல் உதவியாளர் 3000 ரூபாய்  முதல் 6000 வரை


 சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8.997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உரிய ஆணை வழங்குமாறு சமூக நல ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

45
midday meal scheme

 சமூக நல ஆணையரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டது. அதனடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் தொய்வின்றி நல்லமுறையில் செயல்பட இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியாகவுள்ள பணியிடங்களுள் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் ரூ.3000/- என்ற தொருப்பூதிய அடிப்படையில் நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான நான்கு மாதங்களுக்கான தொகை ரூ. 10.70,64,000/- (ரூபாய் பத்து கோடியே எழுபத்தொன்பது இலட்சத்து, அறுபத்து நான்காயிரம் மட்டும்) ஒப்புதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

55
midday meal scheme jobs

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3.000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.

தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறைஊதிய ((STS) நிலை-1 (ரூ.3000-2000)) வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதிய சமையல் உதவியாளர் பணி நியமனத்திற்கு குறைந்தபட்
கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி என நிர்னாயம் செய்யப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories