Published : Dec 20, 2024, 05:02 PM ISTUpdated : Dec 20, 2024, 05:05 PM IST
Half yearly Exam: கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரையாண்டுத் தேர்வுகள் நாளை நடைபெறும். பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
24
Half yearly Exam
இதனையடுத்து அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனவே அந்த நாளில் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு பாடத் தேர்வுகளை எப்போது நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் நாளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.