Coimbatore blast
கோவை தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத் தலைவராக இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Basha Death
இதனையடுத்து 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார். இதனிடையே வயது மூப்பு காரணமாக அவ்வப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
Annamalai
ஆனால் தொடர்ந்து அவரது உடல் மோசமடைந்ததை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலமானது காவல்துறை அனுமதியுடன் கடந்த 17ம் தேதி நடந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதற்கு தமிழக பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Annamalai Arrest
இந்நிலையில் கோவை பாஷாவின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல்துறையை கண்டித்து கோவையில் கண்டன பேரணி நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதால் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.