தமிழக அரசின் கல்வித்திட்டம்
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக ஏழ்மையான மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடைபடுவதை தடுக்க காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆர்வமாக மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர்.
இதே போல அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் என்கிற திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.