தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமா? சிறப்பு பேருந்து சேவை அறிவிப்பு!

Published : Oct 02, 2024, 07:10 AM IST

தொடர் விடுமுறையையொட்டி, வெளியூர் பயணம் செய்யும் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

PREV
14
தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமா? சிறப்பு பேருந்து சேவை அறிவிப்பு!
kilambakkam

வெளியூரில் வேலை- சொந்த ஊர் பயணம்

சொந்த ஊரில் வேலை கிடைக்காமல்  லட்சக்கணக்கான மக்கள் வேலை தேடி வெளியூருக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஷேச நாட்கள் மற்றும் வார விடுமுறை தினத்தில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள். எனவே பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை,, வார விடுமுறை மற்றும் பூஜை பண்டிகை விடுமுறையையொட்டி ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும் தயாராகி வருகின்றனர்.  அந்த வகையில் கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

24
tamilnadu bus

சிறப்பு பேருந்து அறிவிப்பு

இந்தநிலையில் தற்போதும் வருகிற வெள்ளிக்கிழமை அக்டோபர் 4ஆம் தேதி, சனிக்கிழமை அக்டோபர் 5ஆம் தேதி மற்றும் அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான பயணிகள் வெளியூர் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 04/10/2024 (வெள்ளிக்கிழமை) 05/10/2024 (சனிக்கிழமை) 06/10/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு வருகிற 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 260 பேருந்துகளும், 

34
Chennai bus

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து

5ஆம் தேதி சனிக்கிழமை 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி  வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 5 ஆம் தேதி சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

இதேபோல பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 04 ஆம் தேதி  அன்று 15 பேருந்துகளும் அக்டோபர் 5ஆம் தேதியன்று 15 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 

44

முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுகோள்

மேலும் . ஞாயிறு அன்று பள்ளி விடுமுறை முடிந்தும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,939 பயணிகளும் சனிக்கிழமை 3,869 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,657 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories