ரயிலில் இனி கூட்டமே இருக்காது.. திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே!

First Published Oct 1, 2024, 3:27 PM IST

ரயில்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பதிக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது.

Cash limit in train travel

ரயிலில் கூட்ட நெரிசல்- தீர்வு எப்போது.?

பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும் போது பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணிப்பதையே பெரிதும் விரும்புவார்கள். அந்த வகையில் ஏனென்றால் பாதுகாப்பு ஒரு பக்கம் என்றால் அடிப்படை வசதிகளும் இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக ரயில்களில் நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில்களில் ரிசர்வேஷன் செய்த பயணிகள் கூட தவிக்கும் நிலை உருவானது.

எனவே இந்திய ரயில்வே சார்பாக கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

குட் நியூஸ் சொன்ன ரயில்வே

இந்தநிலையில் புரட்டாசி மாதம் என்றாலோ பெருமாள் கோயில்களில் விஷேசம், அந்த வகையில் திருப்பதியில் கூட்டமானது நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்து மட்டும் ரயில்களில் அதிகளவு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே குட் நியூஸ் தெரிவித்துள்ளது. அதன் படி, திருப்பதிக்கு செல்லும் 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

 ரயில் எண். 16057 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 02 ஆம் தேதி முதல் அக்டோபர் 15, 2024 வரை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டும் ரயிலில் ஒரு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டி, மற்றும் (CHAIR CAR ) ஒரு உட்கார்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டிகள் அதிகரிக்கப்படும். 

Latest Videos


திருப்பதி ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

ரயில் எண். 16058 திருப்பதி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 02 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை  திருப்பதியில் இருந்து  சென்னை திரும்பும் ரயில் ஒரு பொது வகுப்பு  இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் (CHAIR CAR ) ஒருஒரு உட்கார்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டிகள் அதிகரிக்கப்படும். 

ரயில் எண். 16053 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் திருப்பதி எக்ஸ்பிரஸ் அக்டோபர் 02 ஆம் தேதி முதல் முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு உட்கார்ந்து (CHAIR CAR )  செல்லும் வசதி கொண்ட பெட்டி அதிகரிக்கப்படும்.

8 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

ரயில் எண். 16054 திருப்பதி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் அக்டோபர் ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை திருப்பதியில் இருந்து ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி  மற்றும் ஒரு உட்கார்ந்து (CHAIR CAR ) செல்லும் வசதி கொண்ட் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ரயில் எண். 22616 கோயம்புத்தூர் திருப்பதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை கோவையில் இருந்து ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு உட்கார்ந்து செல்லும் (CHAIR CAR ) வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் 

tirupati laddu

பொதுப்பெட்டி மற்றும் உட்கார்ந்து செல்லும் பெட்டி இணைப்பு

ரயில் எண். 22615 திருப்பதியில் இருந்து அக்டோபர் 03 முதல் அக்டோபர் 16, 2024 வரை திருப்பதியில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு உட்கார்ந்து செல்லும் பெட்டி (CHAIR CAR ) ஆகியவற்றுடன் அதிகரிக்கப்படும். 

 ரயில் எண். 22617 திருப்பதி - எஸ்எம்விடி பெங்களூரு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 2024 அக்டோபர் 04 முதல் அக்டோபர் 15 வரை திருப்பதியில் இருந்து ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் (CHAIR CAR ) ஒரு உட்கார்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

கூட்ட நெரிசலுக்கு தீர்வு

ரயில் எண். 22618 SMVT பெங்களூரு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக 2024 அக்டோபர் 05 முதல் அக்டோபர் 16 வரை SMVT பெங்களூரிலிருந்து புறப்படும் திருப்பதி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு உட்கார்ந்து (CHAIR CAR ) செல்லும் பெட்டிகள்  அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.

click me!